பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதியை சந்திப்பு!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை கடந்த பத்தாம் திகதி இலங்கைக்கு வந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் ஸ்டீபன் ட்விக் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.



