ரெஜினோல்ட் குரேயின் மரணத்தில் திடீர் திருப்பம்: மனைவி விடுத்த வேண்டுகோள்

#SriLanka #Death #NorthernProvince
Mayoorikka
2 years ago
ரெஜினோல்ட் குரேயின் மரணத்தில் திடீர் திருப்பம்: மனைவி விடுத்த வேண்டுகோள்

மாரடைப்பால் மரணமடைந்த வடமாகாண  முன்னாள் ஆளுநர்   ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு முன்னிலையில் இன்று (13) இடம்பெற்ற மரண விசாரணையின் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

ரெஜினோல்ட் குரேயின் முன்னாள் தனிச் செயலாளர் ஜே.எம். சோமேசிறியின் சாட்சியத்தின் பின்னர், அவர் அவ்வாறு கோரினார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க உட்பட நால்வருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தின் பின்னரே ரெஜினோல்ட் குரே நோய்வாய்ப்பட்டதாக ஜே.எம். சோமேசிறி சாட்சியமளித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், களுத்துறை போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீஅந்த அமரரத்ன தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை  ரெஜினோல்ட் குரே அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!