சிவப்பு ரத்தினக்கல்லை 450 கோடி ருபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

புதையலிலிருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெரிய சிவப்பு ரத்தினக்கல்லை 450 கோடி ருபாவிற்கு விற்பனை செய்ய வைத்திருந்த இருவரை மதவச்சி குருகந்தேகம பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கபிதிகொல்லாவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் ரங்கன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பல கோடி ரூபா பெறுமதியான இந்த சிவப்பு மாணிக்கத்தை இந்த நாட்டில் விற்பனை செய்யாமல் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பிங்கிரிய மற்றும் மண்டபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மெனிக்கல மற்றும் சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கபிதிகொல்லேவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.



