விரைவில் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், மின்வெட்டு ஏற்படும் அபாயம்
#Electricity Bill
Prathees
2 years ago

கட்டணத்தை உயர்த்தாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு தேவையான பணத்தை இலங்கை மின்சார சபை வழங்க வேண்டும் என அதன் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்தார்.
தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு கட்டணங்களை உயர்த்துவதே மிகக் குறைவான சேதம் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வளங்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.



