20 ஆயிரத்து 875 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
#Tourist
#SriLanka
Prabha Praneetha
2 years ago
இந்த வருடத்தின் முதல் வாரத்தில் 20 ஆயிரத்து 875 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் ரஷ்யாவிலிருந்து 5 ஆயிரத்து 926 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 322 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஆயிரத்து 571 பேரும், ஜேர்மனியிலிருந்து ஆயிரத்து 515 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.