உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
#World_Health_Organization
#SriLanka
#children
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்களை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் 'மேரியன் பயோடெக்' என்ற நிறுவனத்தின் தயாரிப்பான 'டோக்-1 மேக்ஸ்' என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது.
அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .



