முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்: அனைத்து தரப்பினரும் ஆதரவு

#SriLanka #Protest #strike #Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம்: அனைத்து தரப்பினரும் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.

தொடர்ந்து இன்றுடன் நான்காவது நாளாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு நகரில் கடைகள் பூட்டி மக்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

அத்துடன் முச்சக்கர வண்டிகள் சங்கம் புதுக்குடியிருப்பு வர்த்தக  உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி  போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
  
முச்சக்கர வண்டிகள் சங்கம் புதுக்குடியிருப்பு அழகக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கிய கடைகளை பூட்டி போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

வேலுப்பிள்ளை மாதவமேஜர் நீராகாரம் உணவு ஏதுமின்றி கடந்த ஒன்பதாம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகின்ற நிலைமையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!