வவுனியா, மதவாச்சி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
#SriLanka
#drugs
#Arrest
Prasu
2 years ago
வவுனியா, மதவாச்சி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (11) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதவாச்சி பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
அதன்போது அவரிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான இளைஞர் மதவாச்சி பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



