கிரிக்கெட் வீரர் தனுஷ்கவின் வழக்கில் சிட்னி நீதிமன்றம் விடுத்த அறிவித்தல்!
#SriLanka
#Srilanka Cricket
#Australia
Mayoorikka
2 years ago

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது
சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
பொலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்படது.
தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் தனுஷ்க மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



