சொலத்தூனில் வரலாற்றுக் கட்டிடம் ஒன்றில் பெரும் தீ! ஒருவர் பலி!!
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#தீ_விபத்து
#தகவல்
#swissnews
#Switzerland
#Accident
#Police
Mugunthan Mugunthan
2 years ago

ஞாயிற்றுக்கிழமை இரவு, எர்லின்ஸ்பாக் நகரில் வரலாற்று சிறப்புக் கட்டிடம் ஒன்று எரிந்ததுள்ளது. அது முன்னாள் உணவகம் லோவென் ஆகும். இந்த பெரும் தீ விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். தீ விபத்துக்குள்ளான நான்கு பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. திங்கட்கிழமை மதியம் வரை ஒருவர் காணவில்லை.
தீயினால் கட்டிடம் பெருமளவில் எரிந்து நாசமானது. கடைசியாக காணாமல் போன நபரை கன்டன் காவல்துறை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நபர் இறந்து கிடந்ததாக கன்டன் போலீசார் செவ்வாய்க்கிழமை காலை இன்று அறிவித்தனர். இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் லேசான காயம் அடைந்தார். மற்ற கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. லட்சக்கணக்கில் சொத்து சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



