மக்கள் ஆணை இல்லாத ஒரு அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யாது!
#SriLanka
#Sri Lanka President
#IMF
Mayoorikka
2 years ago

மக்கள் ஆணை இல்லாத ஒரு அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியம் இந்த நாட்டில் சர்வஜன வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது எனவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
கருத்துக்கணிப்பு மூலம் கருத்து தெரிவிக்க காத்திருக்கும் மக்களுக்கு, அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை வழங்கப்படாவிடின், நாடு மேலும் குழப்பமடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் ஆணை இல்லாத ஒரு அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் உதவாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.



