உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து
#Election
Prathees
2 years ago

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அரசாங்கத்திற்கு வழங்கிய மற்றும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட குழுக்களுக்கான கடன் கட்டணத்தை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பணியாளர்களுக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு அரசாங்கம் பாதிப்பை ஏற்படுத்தாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலத்தில் இருந்த சிரமங்கள் ஓரளவுக்கு தணிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.



