சிங்கப்பூர் சட்டத்தை இலங்கையில் அமுல்ப்படுத்தவுள்ள ஜனாதிபதி!
                                                        #SriLanka
                                                        #Sri Lanka President 
                                                        #Ranil wickremesinghe
                                                        #Social Media
                                                    
                                            
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் சட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான சட்டங்கள் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.