இலங்கையில் பிரபலமாகி வரும் சர்ப்பிரைஸ் கிஃப்ட் -அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள்
                                                        #SriLanka
                                                        #Bank
                                                        #Flower
                                                    
                                            
                                    Nila
                                    
                            
                                        2 years ago
                                    
                                நாட்டில் தற்போது பணத்தாள்களைக் கடதாசிப்பூக்கள் போல் மடித்துப் பூங்கொத்து (bouquets) செய்து பரிசளிக்கும் முட்டாள்தனமான Surprised Gift Trend ஒன்று பிரபலமாகி வருகிறது.
பணத்தாள்களை இப்படி சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.அதுமட்டுமல்லாது , இப்படி மடிக்கப்பட்ட / சேதப்படுத்தப்பட்ட தாள்களை இயந்திரங்களில் வைப்பிலிட்டால் என்னவாகும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்.
ஓரிருவர் செய்யும் தவறினால் பலரும் இயந்திரம் பழுதுபார்க்கும் வரை தமது வங்கி நடவடிக்கைகளைப் பூரணப்படுத்த முடியாமல் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே இவ்வாறான முட்டாள்தனமான செயல்களை இனியாவது தொடராது நிறுத்திவிடுங்கள். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை சிந்தித்து சமூக பொறுப்போடு அனைவரும் செயல்படவேண்டும்.