போதைப்பொருளுடன் பெண் உட்பட 10 பேர் கைது
                                                        #Arrest
                                                        #Heroin
                                                    
                                            
                                    Prathees
                                    
                            
                                        2 years ago
                                    
                                நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த பெண் உட்பட பத்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்,
கல்கிஸ்ஸ, வட்டரப்பல ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதுஇ  பெண் சந்தேகநபர் 10 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேகநபர்கள் தன்லகம, கல்கிஸ்ஸ, நவகமுவ, பேலியகொட, பொரளை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களிடம் ஹெரோயின் போதைப்பொருளும், மற்ற இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.