ட்விட்டர் சமூக ஊடக வலையமைப்பில் பாரிய சைபர் தாக்குதல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன
#Twitter
Prathees
2 years ago

உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை ஹேக்கர்கள் குழு ஒன்று திருடி இணையத்தில் ஹேக்கர் குழுக்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் பதிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்த உயர்மட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டது குறித்து ட்விட்டர் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இச்சம்பவம் குறித்த தகவல்கள் முதன்முறையாக டிசம்பர் 24ஆம் திகதி சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.



