கர்நாடகாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 38 இலங்கைத் தமிழர்கள்!

இந்தியா கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 38 பேர் இன்று முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
2021 - 06 - 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாள்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே இலங்கையர்கள் 38பேரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் 38பேரும் விடுதி ஒன்றில், தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாம் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



