வைத்தியசாலைகளுக்கென இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 72000 கிலோ தோடம்பழங்கள்!
#SriLanka
#Hospital
#Sathosa
#Food
Mayoorikka
2 years ago
இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத தோடம்பழங்கள் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
மூன்று கொள்கலன்களில் உள்ள 72000 கிலோ தோடம்பழங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
72 மில்லியன் ரூபா பெறுமதியான 72000 கிலோ தோடம்பழங்கள் சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படவுள்ளது.
இதனை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்துள்ளார்.