ஹங்வெல்ல ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
                                                        #Police
                                                        #GunShoot
                                                    
                                            
                                    Prathees
                                    
                            
                                        2 years ago
                                    
                                கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் மொஹமட் பரூஷான் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அப்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.
சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்