சுமார் 18,000 பணியாளர்களை, பணிநீக்கம் செய்வதற்கு அமெசன் நிறுவனம் தீர்மானம்
Kanimoli
2 years ago

சுமார் 18,000 பணியாளர்களை, பணிநீக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமெசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வரும் நிலையில், 6 சதவீத பணியாளர்களே தொழிலில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதியுடன் அமுலுக்கு வருவதாகவும் அதன் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்படுகின்றவர்களுக்கு கொடுப்பனவு செலுத்தப்படும் என்பதுடன், மருத்துவ காப்புறுதியும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



