இலங்கையில் அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago

ஓய்வு நிலை பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளான இன்று அனைத்துஅரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் உடல் நல குறைபாட்டினால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரின் மறைவிற்கு உலகத் தலைவர்களும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் பாப்பரசரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வத்திக்கானில் உள்ள செயின்ட் பீற்றர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.



