தேர்தலுக்கு செலவிடப்படும் பணத்தை எனக்கு கொடுங்கள் : அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை
Prathees
2 years ago

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை நெல் வாங்குவதற்கு வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் பிற்போடப்பட்டதன் பின்னர் பணத்தை தனது அமைச்சுக்கு வழங்கினால் விவசாயிகளை பாதுகாத்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்கள் தேர்தலை கோர மாட்டார்கள் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.



