முன்னாள் ஜனாதிபதி மைத்திரி முன்வைத்த கோரிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

#Court Order #Maithripala Sirisena
Prathees
2 years ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி முன்வைத்த  கோரிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவை பெப்ரவரி 22ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த போதிலும், அந்த கோரிக்கையை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது என அறிவித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!