75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய முத்திரை மற்றும் நாணயங்களை வெளியிட தபால் திணைக்களம் தீர்மானம்
#SriLanka
Prasu
2 years ago
இவ்வருடம் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 1000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும் 75 நினைவு நாணயங்களையும் வெளியிடவுள்ளது.
தேசிய சுதந்திர தினம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றாண்டை நோக்கி ஒரு படியாக ‘நமோ நமோ மாதா’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர விழா பெருமைக்குரிய வகையில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.



