யால பூங்கா நேற்று அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்தது

டிசம்பர் 23, 2022 மற்றும் ஜனவரி 2, 2023 க்கு இடையில் யால தேசிய பூங்காவை பார்வையிட பெருமளவிலான மக்கள் வந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்தித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார, மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்தக் காலப்பகுதியில் யால பூங்கா இதுவரையில் நேற்று (02) அதிகூடிய வருமானத்தைப் பதிவு செய்தது. நேற்று மட்டும் வருமானம் ரூ.11,264,179.10.
மேலும் இந்த ஆண்டு, ஜனவரி 1ஆம் திகதி பெற்ற அதிகபட்ச வருமானம் ரூ.4,708,450 ஆகவும், ஜனவரி 2ஆம் திகதி ரூ.11,264,179.10 ஆகவும் உள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்திற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதால், யால பூங்காவில் உள்ள விலங்குகளைப் பார்ப்பதற்காக அவர்களில் அதிகமானோர் தினமும் வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் அமைச்சரிடம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது தேசிய பூங்காக்கள் தொடர்பில் நாட்டிற்கு தேவையான டொலர்களை ஈட்டுவதற்கான வேலைத்திட்டத்தை எதிர்வரும் பதினைந்து நாட்களில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



