ஆடைத் தொழிற்சாலையொன்றில் உணவு விஷமாகி 114 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #Food #Police
Mayoorikka
2 years ago
ஆடைத் தொழிற்சாலையொன்றில் உணவு விஷமாகி 114 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உணவு விஷமாகி 114 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் பணிப்பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று காலை குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உணவை உண்ட ஆடைத் தொழிலாளர்கள் சுகயீனம் அடைந்ததாக தெரியவருகின்றது.

நோய்வாய்ப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!