டீசல் விலை குறைந்தாலும் தனியார் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை - கெமுனு விஜேரத்ன
#SriLanka
#Fuel
#prices
#Bus
Prasu
2 years ago

டீசல் விலை நேற்று (ஜன 02) நள்ளிரவு முதல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகிறார்.
பஸ் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்க, டீசல் விலையை குறைந்தபட்சம் 35 அல்லது 40 ரூபாவினால் குறைக்க வேண்டும் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நேற்றைய விலை குறைப்புடன், ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 355 ரூபாவாகும். இந்நிலையிலேயே இது தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



