நாளை 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
#SriLanka
#Electricity Bill
#Power
#power cuts
#Protest
Mayoorikka
2 years ago
அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால், நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபைக் கிளை அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாளை (03) நண்பகல் 12 மணிமுதல் இரண்டு மணிநேரம் இந்த போராட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.