இலங்கையில் தொடரும் கொடூரம் -தாய் கொடுத்த விஷத்தை அருந்திய 5 வயது மகன் பலி! - தாயும், மற்றொரு மகனும் வைத்தியசாலையில்
#SriLanka
#Hospital
#Death
#children
#Police
Nila
2 years ago

தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா, நால்ல - லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கம்பஹா - நால்ல
தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய தாயொருவர் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாயினால் விஷமூட்டப்பட்ட, எட்டு வயதான மற்றைய பிள்ளை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



