மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது மனித உரிமை மீறல் - PUCSL
#இலங்கை
Mugunthan Mugunthan
2 years ago

அரசாங்கம் திட்டமிட்டபடி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அது மனித உரிமை மீறலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் நிமல் பெரேரா, மின்சார கட்டணத்தை உயர்த்தினால் நாடு பொருளாதார ரீதியாகவும் வீழ்ச்சியடையும் என தெரிவித்தார்.
இதேவேளை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் நிரந்தரமாக அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் குறித்த சட்டமூலத்தில் புதிய கட்டணம் சேர்க்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



