பொலிஸ் அதிகாரி வீட்டில் புகுந்த கொள்ளை கும்பலில் 3 பேர் கைது
#Arrest
#Police
#Robbery
Prathees
2 years ago

வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதியின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில், வெலிபன்ன, பொண்டுபிட்டிய பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள், அவரது மனைவியின் கைகளைக் கட்டி, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அலோபோமுல்ல, குடா அருக்கொட மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



