அரச நிறுவனங்களின் நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்த சுற்றறிக்கை வெளியீடு!
#SriLanka
#Sri Lanka President
#Srilanka Cricket
#Parliament
Mayoorikka
2 years ago

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடபட்டுள்ளது.
அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் ஒதுக்கப்படும் ஒதுக்கீடு வரம்புகள் அடுத்த வருடத்திற்கு மிகையாகாத வகையில் செலவுகளை நிர்வகிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.



