சுவிட்சர்லாந்தின் பேர்னில் மனைவியின் மரணத்துடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் கணவன் கைது
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#மரணம்
#மனைவி
#கணவன்
#swissnews
#Switzerland
#Death
#wife
#husband
Mugunthan Mugunthan
2 years ago

சுவிட்சர்லாந்தின் பேர்னில் 29 வயதான பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் அவரது 35 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேர்ன் கான்டனின் கெஹர்ஸ்டாஸ் என்னும் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் குறித்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த பெண்ணின் மரணத்துடன் கணவருக்கு தொடர்பிருக்க அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்தின் பேரில் குறித்த 35 வயதான சுவிஸ் பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



