இலங்கையில் இருந்து வெளியேறும் முக்கிய கடன் தரமதிப்பீட்டு நிறுவனம்!
 
                ஐசிஆர்ஏ லங்கா லிமிடெட் என்ற கடன் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையில் தனது செயற்பாடுகளை நிறுத்த தீர்மானித்துள்ளது.
தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த முடிவை ஏற்கனவே அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம், இலங்கையில் இருந்து ஏன் வெளியேற முடிவு செய்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
எனினும் அதன் இந்திய முதன்மை நிறுவனமான, ஐசிஆர்ஏ லிமிடெட், கடந்த நவம்பர் மாதத்திற்குள் இலங்கையின் செயற்பாடுகளில்; இருந்து வெளியேறுவதற்கு முன்பே முடிவு செய்திருந்தது.
ஐசிஆர்ஏ லங்கா என்பது இந்தியாவின் ஐசிஆர்ஏ லிமிடெட் நிறுவனத்தின் முழுமைச் சொந்தமான துணை நிறுவனமாகும்,
இது ஐசீஆர்ஏ குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும்.
இந்தநிலையில், இது சுயாதீனமான மற்றும் தொழில்முறை முதலீட்டு தகவல் மற்றும் கடன் தரவரிசைகளில் உள்ளடங்கியுள்ளது.
சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் மறைமுக பெரும்பான்மை பங்குதாரராகவும் ஐசீஆர்ஏ நிறுவனம் செயற்படுகிறது.
மே 2011 இல் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் ஐசீஆர்ஏ லங்காவிற்கு உரிமம் வழங்கப்பட்டது.
நிறுவனம் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவையும் கொண்டிருந்தது, இது நாட்டின் பொருளாதாரக் கொள்கையை வடிவமைப்பதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது,
ஐசிஆர்ஏயின் வெளியேற்றத்துடன், தற்போது, இலங்கையின் கடன் தரப்படுத்தல் முகவர் நிறுவனங்களாக, பிட்ச் ரேட்டிங்ஸ்; மற்றும் லங்கா ரேட்டிங் ஏஜென்சி ஆகியவையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            