கண்டி அகுரணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் சட்டவிரோத கட்டடங்கள்
#SriLanka
#Flood
#kandy
Kanimoli
2 years ago

கண்டி அகுரணை நகரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணம் சட்டவிரோத கட்டடங்களாகும் என்று பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் லலித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹாவலி கங்கை, பிங்ஒய உட்பட நீர்நிலைகளை மறித்து கட்டட நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இதற்கான பிரதான காரணமாகும்.
சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் அக்குரனை, கண்டி போன்ற நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமக அக்குரனை நகரில் பாரிய வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது



