காணிகள் திணைக்களத்தின் செயற்பாடும் அங்கு பதிவுகளை மேற்கொள்ளலும்.

1864ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு 152 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெருமைமிக்க வரலாறு உண்டு. எங்களுடைய தொலைநோக்கின் ஊடாக இலங்கையில் விவாகம், பிறப்பு, இறப்பு போன்ற அடிப்படை வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல் என்பவற்றின் மூலம் பொதுமக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவை இத்திணைக்களத்தின் செயற்பாடுகாளாகும்.
குடியியல் பதிவுமுறைமையின் கீழ் விவாகம், பிறப்பு, இறப்பு என்பவை இந்த திணைக்களத்தின்மூலம் 1867ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவில்லை குடியியல் பதிவுமுறைமை பொது மக்களுக்கு அவர்களின் வசதிக்காக விரைவான சேவையை வழங்குவதற்காக 1992ஆம் ஆண்டு மாவட்ட செயலக மட்டத்திற்குப் பன்முகப்படுத்தப்பட்டது.
1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்து பதிவு சட்டத்தின் கீழ்இந்த திணைக்களத்திற்கு உரித்துகளைப் பதிவுசெய்யும் அதிகாரமளிக்கப்பட்டது.
எமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.
தற்போதுள்ள கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் உறுதி மற்றும் காணி பதிவு புத்தக பிரதிகளைக் கோருவதில் உள்ள சிரமங்களைக் குறைக்க, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திணைக்களத்தால் நிகழ்நிலை கோரிக்கை முறை தொடங்கப்பட உள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணினிகளில் இருந்து சான்றிதழ் நகல்களைக் கோருவதற்கு கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம். மாஸ்டர் / விசா கார்டுகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பணம் செலுத்தலாம்.
ஒரு காணியைப் பதிவுசெய்வதற்கு அந்த காணி அமைந்துள்ள பிரதேசத்தின் காணி பதிவு அலுவலகத்திற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரசித்த நொத்தாரிசினால் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
பதிவுக்காக ஆவணங்களை எப்படி சமர்ப்பிப்பது,
- தபால் மூலம்
- சென்று ஒப்படைப்பதுமூலம்
ஆவணத்தின் நிலைகேற்ப பதிவுக் கட்டணம் அறவிடப்படும்
அசையும் சொத்துக்கள் ரூ. - 22.50
அசையும் சொத்துக்கள் ரூ. - 30.00 (மேலதிக காணியைப் பதிவுசெய்ய மேலதிக கட்டுணம் ரூ.10.00)
மேலதிக விபரங்களுக்கு-
https://www.tisrilanka.org/pub/reports/LAND_Tamil.pdf



