பல மணி நேரம் மின்வெட்டுக்கு பழகிக்கொள்ள வேண்டும் – அமைச்சர்
                                                        #power cuts 
                                                        #Minister
                                                        #Power
                                                        #SriLanka
                                                    
                                            
                                    Prabha Praneetha
                                    
                            
                                        2 years ago
                                    
                                மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.