சுவிஸ் மக்கள் அதிக செலவில் விடுமுறைக் காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்! ஆய்வில் தகவல்
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் உணவுப் பொருள் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு ஏதுக்கள் காணப்பட்டாலும் சுவிட்சர்லாந்து மக்கள் விடுமுறைக்காக கூடுதல் பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கோவிட் காலத்திற்கு முன்னரான காலப் பகுதியில் செலவிட்ட தொகைகளை விடவும் கூடுதல் தொகையை மக்கள் விடுமுறைக்காக செலவிடுகின்றனர்.
அதிக விலையிலான ஹோட்டல்களை பதிவு செய்து அங்கு மக்கள் விடுமுறையை கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் காலத்திற்கு முன்னர் செலவிட்டதனை விடவும் தற்பொழுது வாடிக்கையாளர்கள் 10 முதல் 20 வீதம் வரையில் பணத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.