சிறையில் உள்ள கைதிகளுக்கு உறவினர்களை சந்திக்க அனுமதி!
Mayoorikka
3 years ago
நத்தார் பண்டிகையான இன்று உறவினர்களை சந்திப்பதற்கு கிறிஸ்தவ மத கைதிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளது.
கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவு ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமானதாக இருக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளதுடன் கரோல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.