நாயொன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பொய்: ஆசு மாரசிங்க
Prathees
2 years ago

வளர்ப்பு நாயொன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண், அவர் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் பண தகராறு இந்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ போலியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.



