என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்த தலிபான்

Prasu
2 years ago
என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்த தலிபான்

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. 

இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். 

சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தலிபான் அரசு தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்ஜிஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் எந்த ஒரு என்ஜிஓ நிறுவனமாக இருந்தாலும், இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!