தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பாக 78 பேரிடம் வாக்குமூலம் பதிவு
Prathees
2 years ago

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பாக 78 பேரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் அவருடைய மனைவியும் ஒருவர்.
மேலும்இ அவரது அலுவலகத்தில் வேலை செய் யும் நபர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தினேஷ் ஷாப்டர் கடந்த 15ஆம் திகதி பொரளை மயானத்தில் காரில் கைஇ கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.



