இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் பதிவு
Kanimoli
2 years ago

இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்த குழு ஒன்று இளம் யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தலபத்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி குறித்த யுவதியை கடத்த முயன்றுள்ளனர்.
அதன் பின்னர், அப்பகுதி மக்களும் சம்பவ இடத்துக்கு வந்ததால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒபேசேகரபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.



