ஏனைய பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் கவனம்
Prathees
2 years ago

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தக்கூடிய பொருட்களின் வகைகள் எதிர்காலத்தில் ஆராயப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி கைத்தொழில், மீன்பிடி தொழில், விவசாய கைத்தொழில் மற்றும் பிற மாற்று அல்லாத பொருட்கள் மீது கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களும் கடந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.
ருவன்வெல்ல விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.



