வணிகர் ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
Kanimoli
2 years ago

வணிகர் ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளை – நீராவிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறு வியாபார வணிக நிலையம் ஒன்றை நடத்தி வந்த வணிகர் ஒருவரே இவ்வாறு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் எனும் நபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வணிகரின் சடலம் அவரது கடைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரியின் மருத்துவ அறிக்கையின் படி அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினரும், தடயவியல் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



