தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல்!
Mayoorikka
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




