பிரித்தானியாவில் நெருக்கடி - மேலும் இரு வேலை நிறுத்தங்கள் அறிவிப்பு
Nila
2 years ago

இங்கிலாந்தின் ஐந்து பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜனவரியில் மேலும் இரண்டு வேலைநிறுத்தங்களை நடத்த உள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஜனவரி 11 மற்றும் 23ம் திகதிகளில் மேற்கொள்ளப்படும் தொழில்துறை நடவடிக்கையானது அவசர சிகிச்சைக்கு அதிக அழுத்தத்தைக் குவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இது ஏற்கனவே கடுமையான நிலையில் இருக்கும் சுகாதார துறையை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்ததன் நேரடி விளைவுதான் இந்த நடவடிக்கை என யூனிசன் தலைவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், 999 க்கு உயிருக்கு ஆபத்தான அழைப்புகள் மற்றும் மிக தீவிரமான அவசர அழைப்புகள் பதிலளிக்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



