இலங்கையில் ஆரம்ப பிரிவு கல்வி நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்
Nila
2 years ago

இலங்கையில் ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, அடுத்தாண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



