இலங்கையை போதையிலிருந்து மீட்க என்ன வழி...?

இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை..... என தினந்தோறும் ஏதாவதொரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும்.
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலையேற்றப்பட்டு, நாடு வறுமைக்குள் தள்ளப்பட்டாலும், போதைப்பொருள் பாவனைக்கு மட்டும் பஞ்சமே ஏற்படவில்லை.
கொடி கட்டிப்பறக்கும் இப்போதைப்பொருள் பாவனையை ஏன் கட்டுப்படுத்த முடியாது... என சற்றேனும் சிந்தித்துப் பாருங்கள்.
ஆம். ஐஸ் போதை பொருளால் சீரழியும் இளைஞர்கள் யுவதிகளை காக்க பொதுமக்கள் பெற்றோர் பாடசாலை ஆசிரியர்கள் நண்பர்கள் உதவவேண்டும்.
எப்படி உதவுவது?
விற்பனை செய்பவர்களை அல்லது விநியோகம் செய்பவர்களை பற்றிய தகவல்களை காவல்துறைக்கு அறிவிக்கலாம்.
தமது பிள்ளைகள். உறவினர்கள். நண்பர்கள். பாவிப்பதை அறிந்தால் காவல்துறைக்கு அறிவிக்கலாம்.
பாடசாலை அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பாவிப்பவர்கள் வியாபாரிகளை பாடசாலையூடாக அறிவித்தல்.
ஐஸ் போதையின் தீமையை பற்றிய விழிப்புணர்வை, பாடசாலை கோவில்கள் சந்தை போன்ற இடங்களில் ஏற்படுத்துதல்.
முக்கியமாக மொத்த வியாபாரிகளை கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வளங்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
ஐஸ் போதை பாவனை செய்பவர்களை கைதுசெய்து நன்னடத்தை பள்ளியில் வைத்து அவர்களை திருத்தி நல்ல மனிதர்களாக வெளியுலகத்துக்குள் விட்டு அவர்கள் மூலமாக அதன் தீமையை இலங்கை பூராகவும் பிரச்சாரம் செய்தல்.
இவ்வாறானவற்றை கடைப்பிடித்தால் விரைவில் இலங்கை போதைப் பொருளில் இருந்து மீளும்.



