ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் 30 அடி உயர காய்கறி கிறிஸ்துமஸ் மரம்
Prathees
2 years ago

விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில், இந்த நத்தார் பண்டிகைக்காக மரக்கறி செடிகளால் ஆன நத்தார் மரமொன்று, காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம், உயிருள்ள காய்கறி செடிகளுடன் சுமார் 2000 தொட்டிகளைக் கொண்டுள்ளது.
இந்த மரத்தை அலங்கரிக்க வள்ளல்கீரை, செம்பலா, பசளி, கத்தரி, கோவா, வெண்டிக்காய் போன்ற பல வகையான தாவரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நத்தார் மரத்தை உருவாக்கிய Softlogic Life Insurance PLC, கண்காட்சிக் காலத்தின் பின்னர், மக்கள் மத்தியில் மற்றும் பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



